மல்லிகைப் பூவால் வடிவமைக்கப்பட்ட உடையில் ஜொலித்த மணப்பெண் ராதிகா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முகேஷ் அம்பானி இல்லத் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான ஹல்டி நிகழ்ச்சியில் மணமகள் மல்லிகைப்பூ உடையில் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தம்பதியரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது. அவர்களுக்கு நாளை மறுநாள் ஜியோ வேர்ல்ட் சென்டரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்பானி இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஹல்டி நிகழ்ச்சியில் மணமகள் மல்லிகைப் பூவால் வடிவமைக்கப்பட்ட மஞ்சள் நிற உடையில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். 

Night
Day