மாட்டுத் தொழுவங்களின் தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க வனத்துறை அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா மாநிலம் குருகிராமில் 2 சிறுத்தைகள் தாக்கியதால் 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. குருகிராமில் உள்ள திக்லி கிராமத்தில் இரவு நேரத்தில் 2 சிறுத்தைகள் உலாவந்தன. அந்த சிறுத்தைகள் அங்கிருந்த மாட்டுத்தொழுவத்திற்கு புகுந்து 10 கால்நடைகளை அடித்து கொன்றன. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து, மாட்டுத்தொழுவ தடுப்பு சுவரின் உயரத்தை உயர்த்தி வலைகளை அமைக்க உரிமையாளருக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

Night
Day