எழுத்தின் அளவு: அ+ அ- அ
மாநிலங்களவையில் ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மாநிலங்களவையில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், தன்னிடம் ஆளும் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும், அதில், கர்நாடகா வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணைய முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் இவ்விகாரத்தை பூஜ்ஜிய நேரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை ஜகதீப் தன்கர் நிராகரித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் பா.ஜ.க எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆளும் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சட்டென குறுக்கிட்ட அவை தலைவர் ஜகதீப் தன்கர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை நிராகரித்தது போலவே இன்றும் நிராகரித்ததாக விளக்கமளித்து அவையை கேள்வி நேரத்திற்கு கொண்டு சென்றார்.