மாநிலங்களவையில் வக்ஃப் திருத்த மசோதா இன்று தாக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே, வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இரவு 12 மணியளவில் நடந்த வாக்கெடுப்புக்கு பின்னர், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. 

இந்தநிலையில், மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், இன்றைய நிலவரப்படி 8 லட்சத்து 72 ஆயிரம் வக்ஃப் சொத்துக்கள் உள்ளதாகவும், இந்த மசோதாவை ஆதரிக்குமாறு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

Night
Day