மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி. ஆக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சோனியா காந்தி போட்டியின்றி தேர்வானதாக ராஜஸ்தான் பேரவை செயலாளரான தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியாகாந்தி, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின் போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என அறிவித்திருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி தேர்வாகியுள்ளார். வரும் மக்களவை தேர்தலில் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day