மாநிலங்களவை தேர்தல் : கர்நாடகா உ.பி. ஹிமாச்சலில் குழப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. நிறுத்தியுள்ள மாநிலங்களவை வேட்பாளர்களால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கிலியடைந்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் வைத்த இரவு விருந்தில் 8 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாததால் அக்கட்சியின் மூன்றாவது வேட்பாளர் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. பா.ஜ.க.வில் இருந்து 7 பேரும், சமாஜ்வாதி கட்சியில் இருந்து 3 பேரும் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில் பா.ஜ.க. 8 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் சமாஜ்வாதி கட்சி கலக்கம் அடைந்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேரும், பா.ஜ.க. சார்பில் ஒருவரும் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில் பா.ஜ.க. இரண்டு வேட்பாளர்களை நிறுத்தி விறுவிறுப்பை கூட்டியுள்ளது. அதே போல ஹிமாச்சலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் மனு சிங்விக்கு எதிராக போதிய பலம் இல்லாத பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Night
Day