மாமனாரை காலணியால் தாக்கிய மருமகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில், வீல்ச்சேரில் நடமாடும் மாமனாரை காலணியால் மருமகள் தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.

வேமுலபள்ளி கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் சொத்து தொடர்பாக குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருமகள், நடக்க முடியாமல் வீல்ச்சேரில் நடமாடி வரும் தனது மாமானாரை நடு வீதியில் வைத்து காலணியால் தாக்கியுள்ளார். தன்னை அடிக்க வேண்டாம் என்று கூறிய மாமனார், காலைப் பிடித்து கெஞ்சியும், மனமிரங்காத அந்த பெண் தொடர்ந்து காலணியால் தாக்கிய காட்சிகள் வைரலாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அக்கிராம மக்கள், மருமகள் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து அவரை சிறையில்அடைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day