மாலத்தீவில் இருந்து இந்தியா ராணுவ வீரர்கள் வெளியேற்றம் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேறும் பணி தொடங்கியுள்ளது. மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் உருவானது. இதையடுத்து மாலத்தீவில் உள்ள இந்திய படைகளை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என்றும் எஞ்சியவர்கள் மே 10-தேதிக்குள் வெளியேறுவார்கள் என அதிபர் முய்சு தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ராணுவ வீரர்களுக்குப் பதிலாக,  இந்திய தொழில்நுட்பக் குழுவை நியமிக்க முய்சு ஒப்புதல் அளித்தார். அதனடிப்படையில்  முதல் கட்ட இந்திய தொழில்நுட்ப குழு மாலத்தீவு சென்றுள்ளது. 

Night
Day