மாலத்தீவு மக்களுக்கு இந்திய ராணுவத்தின் மருத்துவ சேவை தொடர ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாலத்தீவு மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் வழங்கிவரும் மருத்துவ சேவைகளை இந்திய ராணுவம் தொடர இரு தரப்பிலான பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் மார்ச் 15-ற்குள் வெளியேற வேண்டும் என அதிபர் முகமது முய்சு வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் மாலத்தீவில் 3 விமான தளங்களில் பணியாற்றும் ராணுவ வீரா்களை மே 10-ம் தேதிக்குள் மாற்றுவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக மாலத்தீவு வெளியுறவுத்துறை தெரிவித்தது. இரு தரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

Night
Day