மீனவர் பிள்ளைகளுக்காக விரைவில் கல்வி உதவித்தொகை திட்டம் - புதுவை முதல்வர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி மீனவர்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கி அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் துறைமுகத்தில் 24 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 49 விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி வலை மற்றும் கயிறு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி, 60 சதவீத மானிய விலையில் படகு உரிமையாளர்களுக்கு தலா 100 கிலோ வலை மற்றும் 30 கிலோ கயிறு வகைகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மீனவர்கள் நலனின் மீது அரசு மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. மீனவர்களின் பிள்ளைகளுக்கு அறிவிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு விரைந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.

Night
Day