முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பணி நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது உதவியாளர் பிபவ் குமார், டெல்லி லஞ்ச ஒழிப்பு இயக்குநரகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு பிபவ் குமார், மகேஷ் பால் என்ற அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, அவரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக நொய்டா காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரை லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் பணி நீக்கம் செய்து அறிவித்துள்ளது.

Night
Day