முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வியை தழுவியதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து நவீன் பட்நாயக் விலகியுள்ளார். 

ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்கிறது. ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது. இந்தநிலையில் தோல்வியை தழுவியுள்ள நவீன் பட்நாயக் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநில ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நவீன் பட்நாயக் வழங்கியுள்ளார். முன்னதாக 24 ஆண்டுகள் தொடர்ந்து ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day