முதல் தேசிய விண்வெளி தினம் கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூரில் உள்ள பிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் முதல் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. சந்திராயன் 3 கடந்தாண்டு நிலவில் நிலை நிறுத்தப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் அறிவித்தார். இந்நிலையில் இந்திய விண்வெளி மையம் சார்பில் முதல் தேசிய விண்வெளி தினம், திருவள்ளூர் அருகே அரண்வாயலில் உள்ள பிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இதில் உணவு கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சதீஷ்தவான் விண்வெளி மைய இயக்குநர் ராஜராஜன் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். விண்வெளி ஆராய்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Night
Day