முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி பெண்களுக்கு கடன் வழங்கல் - பட்ஜெட் உரையில் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போட்டப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்... மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் புதிய வீடுகள் வாங்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ளன.

2024ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போட்டப்படும் என அறிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் புதிய வீடுகள் வாங்க திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாட்டில் 9 கோடி பெண்களைக் கொண்ட 83 லட்சம் சுயஉதவி குழுக்கள் கிராமப்புற சமூக பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக நிதியமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.

2026ஆம் ஆண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்கும் குறிக்கோளுடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025ஆம் ஆண்டில் நாட்டின் நிகர கடன் 11.75 லட்சம் கோடியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுகளுக்கு வட்டியில்லா கடனாக 75ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024ஆம் ஆண்டுக்கான மொத்த  உள்நாட்டு உற்பத்தி நிதிப்பற்றாக்குறை 5.8 சதவீதமாக இருக்கும் என கூறியுள்ளார்.

நாட்டில் ஒரு கோடி சுய உதவி குழு பெண்கள் லட்சாதிபதிகளாக உயர்ந்துள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர், 2023-24ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீடுகள் 596 பில்லியன் டாலராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025ஆம் நிதியாண்டில் நாட்டின் செலவினம் 47.66 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கூறியுள்ளார்.

2025ஆம் நிதியாண்டில் கடன் பெறுவதை தவிர்த்து நாட்டின் வருவாய் 30.80 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day