முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, நல்லடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 26ம் தேதி உயிரிழந்த நிலையில், நேற்று டெல்லி மோதிலால் சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட அவருடைய உடலுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சியினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மன்மோகன் சிங்கின் உடல் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஹிமாச்சல் பிரதேசம் முதலமைச்சர் சுக்விந்தர் சுகு ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து நிகாம் போத் காட் பகுதியில் நடைபெறும் இறுதி அஞ்சலிக்காக மூவர்ண கொடி போர்த்திய மன்மோகன் சிங்கின் உடல் ராணுவ வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. மன்மோகன் சிங் உடல் எடுத்து செல்லப்பட்ட ராணுவ வாகனத்தில் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.

Night
Day