எழுத்தின் அளவு: அ+ அ- அ
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92.
டெல்லியில் உள்ள தனது வீட்டில் அவர் சுயநினைவை இழந்த நிலையில், இரவு 8 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், இரவு 9.15 மணிக்கு உயிர் பிரிந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி என பலரால் போற்றப்படும் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 7 நாள்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெறும் என்றும் அன்னாரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.