முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வழக்கு மே 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கைது நடவடிகைக்கு எதிராக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு எதிராக ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை மே 6ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைப்பதாகவும் அதற்குள் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் இந்த வழக்கு மீதான தீர்ப்பை வழங்கலாம் எனவும் தெரிவித்தனர். 

varient
Night
Day