மும்பையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 17 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டைச் சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காளதேச குடியேறிகள் தொடர்பான வழக்குகளில் முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவாஜி நகர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி கடந்த 24-ஆம் தேதி 8 பேரையும், 25-ஆம் தேதி 4 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் என 17 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிந்து 17 பேரையும் கைது செய்தனர்

Night
Day