எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், அங்கு ஹேமந்த் சோரன் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கும், கடந்த 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே பாஜக-ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இடையே கடும் போட்டி நிலவியது.
இருப்பினும், இறுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி 56 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கணிப்புகளில், பா.ஜ.க கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அக்கூட்டணி 24 இடங்களை மட்டுமே கைப்பற்றி மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. இந்நிலையில், தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது