மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 78,238 கன அடியிலிருந்து 79,682 கன அடியாக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேட்டூர் அணைக்கு தண்ணீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டியுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 78,238 கன அடியிலிருந்து 79,682 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டியது. மேலும் அணையில், நீர் இருப்பு 43.97 டி.எம்.சியாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

Night
Day