மேற்குவங்க ரயில் விபத்து : சரக்கு ரயில் சிக்னலை மீறியதே விபத்திற்கு காரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

சம்பத்தன்று அதிகாலை 5.50 மணி முதல் ராணிபத்ரா ரயில் நிலையம் மற்றும் சத்தர் ஹட் சந்திப்பு இடையேயான தானியங்கி சிக்னல் பழுதடைந்துள்ளது. இதன்காரணமாக கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில், சத்தர் ஹட் சந்திப்பு அருகே நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக ஆட்டோமேட்டிக் சிக்னலில் பழுது ஏற்பட்டால், ரயில் சிக்னலை கடக்க சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் எழுத்துபூர்வ அதிகாரத்தை ரயில் ஓட்டுநருக்கு அளித்த பின்பே ரயில் இயக்க முடியும். ஆனால், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை பழுதான சிக்னலை கடக்க ராணிபத்ரா ரயில் நிலைய மேலாளர் எழுத்துபூர்வ அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதன் பின்னரே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் ராணிபத்ரா ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டது. அதேநேரம், சரக்கு ரயிலும் ரங்கபாணி நிலையத்தில் இருந்து ராணிபத்ரா நோக்கி புறப்பட்டுள்ளது. ஆனால், பழுதான சிக்னலை கடக்க சரக்கு ரயிலுக்கு எவ்வித எழுத்துபூர்வ அதிகாரமும் வழங்கவில்லை. சரக்கு ரயிலின் லோகோ பைலட் விதிகளை மீறி பழுதான சிக்னலை கடந்து சென்றதே விபத்துக்கு காரணம் என ரயில்வே கூறியுள்ளது. மேலும் பழுதான சிக்னலில் செல்லும் ரயில்கள் 10 கிலோ மீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டும் என்ற விதியையும் சரக்கு ரயில் மீறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day