மே 4ம் தேதி நீட் தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இது குறித்து முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வுக்கு அடுத்த மாதம் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், நுழைவுச்சீட்டு மே 1ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி நடைபெறும் தேர்வின் முடிவுகள் ஜுன் 14ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு ஆயிரத்து 700 ரூபாயும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு ஆயிரத்து 600 ரூபாயும், எஸ்சி, எஸ்டி, 3ம் பாலினத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Night
Day