மே.வங்கத்தில் உள்ள கங்கை நதி குளிப்பதற்கு தகுதியற்றவை : தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கவலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அசுத்தம் அதிகமுள்ளதால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கங்கை நதியின் முழுப் பகுதியும் குளிப்பதற்குத் தகுதியற்று இருப்பதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. நாள்தோறும்  258 புள்ளி 67 மில்லியன் லிட்டர்கள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் பாய்வதாகவும் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு 24 பர்கானாஸ், முர்ஷிதாபாத், நாடியா, மால்டா, ஹூக்ளி, புர்பா பர்த்வான், ஹவுரா, பர்பா மேதினிபூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நீதிபதிகள் தாக்கல் செய்த அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னர் இந்த விவரம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மாசுபாட்டைக் கையாள்வதில் முன்னேற்றம் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Night
Day