யமுனை ஆற்றில் மிதந்து வரும் ரசாயன நுரை அளவு அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியின் காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் மிதந்து வரும் ரசாயன நுரை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து  வெளியேறும் கழிவுகள் யமுனை ஆற்றில் கலப்பதாக ஆளும் ஆம்ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. அதேசமயம் யமுனை நதியைக் காக்க ஆம்ஆத்மி அரசு தவறிவிட்டதாக மத்தியில் ஆளும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. யமுனை ஆற்றில் படிந்துள்ள ரசாயன கழிவுகளில், அம்மோனியா மற்றும் பாஸ்பேட் வேதி பொருள்கள் அதிகம் உள்ளதால், தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுவாசம் மற்றும் தோல் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மோட்டார் படகு மற்றும் நவீன இயந்திரங்கள் உதவியுடன் நுரையை அகற்றும் பணியை டெல்லி அரசு முடக்கி விடப்பட்டுள்ளது.

Night
Day