யமுனை நதிக்கரையில் சத் பூஜை செய்ய அனுமதி மறுப்பு - டெல்லி உயர் நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

யமுனை நதிக்கரையில் சத் பூஜை செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பான வழக்கில், நதி மிகவும் மாசுபட்டுள்ள நிலையில் அதில் மூழ்கி எழுந்தால் நோய்த் தொற்று ஏற்படும் என தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா அமர்வு கவலை தெரிவித்தது. இதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது என்றும் கூறியது. முன்னதாக, கடுமையாக மாசடைந்துள்ள யமுனை நதியில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கக் கூடாது என்றும் சத் பூஜைக்காக ஆயிரங்கள் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பூஜை செய்து கொள்ளலாம் என்றும் டெல்லி அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

varient
Night
Day