யாசகம் கேட்டு வெளிநாட்டினரை துரத்தும் 2 பெண் குழந்தைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தலைநகர் டெல்லியில் 2 பெண் குழந்தைகள் யாசகம் கேட்டு வெளிநாட்டினரை துரத்தும் காட்சி வெளியாகியுள்ளது. டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக 2 வெளி நாட்டு பயணிகள் ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏறியுள்ளனர். அப்போது அவர்கள் செல்லும் ஆட்டோ ரிக்‌ஷாவின் பின்னால் சிறுமி ஒருவர் தொங்கி கொண்டே அவர்களிடம் யாசகம் கேட்கிறார். மற்றோரு சிறுமி விடாமல் அந்த ஆட்டோ ரிக்‌ஷாவை துரத்திக் கொண்டிருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த வெளிநாட்டுப் பயணி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

Night
Day