யூடியூப் விளம்பரங்களுக்காக அதிகம் செலவு செய்த கட்சி பாஜக

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் யூடியூப் விளம்பரங்களுக்காக 19 கோடி ரூபாயை பாரதிய ஜனதா கட்சி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு நாடு நாடு முழுவதும் 9 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற முடிந்தது. தேர்தல் சமயங்களில் இணையவழிப் பிரச்சாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த அரசியல் கட்சிகள் இதற்காக பல கோடி ரூபாயை இதற்காக செலவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாரதிய ஜனதா கட்சி சுமார் 19 கோடி ரூபாயை யூடியூப் வலைதளத்தில் விளம்பரங்களுக்காக மட்டும் செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் கர்நாடகா தேர்தலுக்காக மட்டும் 7 கோடியே 2 லட்சம் ரூபாயும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில தேர்தலுக்காக 7 கோடியே 71 லட்சம் ரூபாயும் செலவு செய்துள்ளது. 

Night
Day