ரயில் விபத்து- குடியரசுத்தலைவர் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது ரக்கு ரயில் மோதி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது பற்றிய செய்திகள் ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாகவும், தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, மேற்கு வங்க ரயில் விபத்தில் பல பயணிகள் உயிரிழந்த செய்தி வேதனை அளிப்பதாகவும், உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல்கள் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் தெவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day