ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ஜெலன்ஸ்கி-டிரம்ப் இடையே நடந்த பேச்சுவார்த்தை கடும் வாக்குவாதத்தில் நிறைவு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் நடைபெற்ற அதிபர்கள் டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவுற்றது. 

அமெரிக்க வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பேசிய டிரம்ப் தான் ஜெலன்ஸ்கியுடனும், ரஷ்ய அதிபர் புதினுடனும் நிற்கவில்லை என்றும், தான் உலகின் நன்மை பக்கம் நிற்பதாகவும் தெரிவித்தார். புதின் மீது ஜெலன்ஸ்கி கொண்டுள்ள வெறுப்பால் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள கடினமாக இருப்பதாகவும், தான் கடினமாக இருக்க வேண்டும் என விரும்பினால், இதுவரை நீங்கள் பார்த்திராத ஒருவரை பார்க்க நேரிடும் என ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் எச்சரித்தார். 

பின்னர் பேசிய ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் தங்களின் உக்ரைனின் பெரிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை இதுவரை யாரும் தடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.  மேலும், அவர் உக்ரைன் மக்களை கொன்றதாகவும், 2019ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாகவும் ஆதங்கத்தோடு கூறினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பேச்சுவாா்த்தை பாதியில் நிறைவடைந்தது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட அதிபா் டிரம்ப், 'அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா விரும்புவதாக குறிப்பிட்டாப். மாறாக, போர் விவகாரத்தில் எந்தவொரு முன்னுரிமையையும் எதிா்பாா்க்கவில்லை என்றும், ஆனால், உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை என்றும் குற்றம்சாட்டினார். அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையிலிருந்து மிகப்பெரிய பலனைப் பெறுவதில் அவா் குறியாக உள்ளாா் என்றும், ஜெலென்ஸ்கி அமைதியைக் கொண்டு வருவதற்குத் தயாராக இருந்தால், மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு நடத்த தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


Night
Day