ராகுல்காந்தி அவைக்கு வருவதில்லை என ஜகதாம்பிகா பால் குற்றச்சாட்டு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற விதிமுறையில் மக்‍களவை எதிர்க்‍கட்சி தலைவர் ராகுல்காந்திக்‍கு விருப்பமில்லை என்றும் அவர் அவைக்கு வருவதில்லை என்றும் பா.ஜ. எம்.பி.யும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு தலைவருமான ஜகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு, கடந்த 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில், மக்‍களவையில் பேச அனுமதிக்கவில்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்து, கருத்து தெரிவித்த ஜகதாம்பிகா பால், நாடாளுமன்ற விதிமுறையில் ராகுலுக்கு விருப்பமில்லை என்றும் அவர் தேசத்தை தவறாக வழி நடத்துவதாக குற்றம் சாட்டினார். ராகுல்காந்தியே அவையில் உட்காருவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

Night
Day