ராகுல்காந்தி எம்.பி.யாக பதவியேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவையில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 18-ஆவது மக்களவையின் முதல்நாள் அமா்வில் பிரதமா் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்களாக பதவியேற்ற நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பதவியேற்பு நடைபெற்றது. அந்த வகையில், ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, அரசியலமைப்புப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி, பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர், வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம் என்றும் முழக்கமிட்டார்.

Night
Day