ராகுல்காந்தி மீது பாஜக பெண் எம்.பி. பரபரப்பு புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தின்போது ராகுல் காந்தி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நாகலாந்தை சேர்ந்த பெண் எம்பி பங்க்னன் கோன்யக், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கடிதம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள கடிதத்தில், அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி செய்த அட்டூழியங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற தன்னிடம், உரத்த குரலில் பேசிய ராகுல் காந்தி, தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அச்சமயத்தில் மிகவும் சங்கடமாக உணர்ந்ததாகவும், தனது கண்ணியம் மற்றும் சுயமரியாதையை ராகுல் காந்தி காயப்படுத்தியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day