ராகுல்காந்தி அமெரிக்கா பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி செப்டம்பர் 8ம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது . 

செப்டம்பர் 8ம் தேதி அன்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் - டல்லாஸ் செல்ல உள்ளதாகவும் , செப்டம்பர் 9 , 10 ஆகிய 2 நாட்கள் வாஷிங்டன் டிசி நகருக்கு ராகுல் காந்தி செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவலை பகிர்ந்துள்ள ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சாம் பிட்ரோடோ, அமெரிக்க பயணத்தின் போது ராகுல்காந்தி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் , தொழிலதிபர்கள் , மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Night
Day