ராஜஸ்தானில் மேலும் ஒரு ஜே.இ.இ.போட்டித் தேர்வு மாணவர் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மேலும் ஒரு போட்டித் தேர்வு பயிற்சி மைய மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பாகல்பூரைச் சேர்ந்த அந்த 16 வயது மாணவன் ஜே.இ.இ.நுழைவுத் தேர்வுக்காக கடந்த ஒரு ஆண்டாக கோட்டாவில் தங்கி பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், தன்னால் ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் மன்னித்து விடுங்கள் அப்பா, நான் முடித்துக் கொள்கிறேன் என எழுதியுள்ளார். கோட்டா நகரில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day