ராமோஜி பிலிம் சிட்டி, ஈநாடு பத்திரிகை நிறுவனத் தலைவர் ராமோஜி ராவ் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் உடல்நலக்குறைவால் காலமானார். 

ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமோஜி ராவ் உடல்நலக்குறை ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பத்திரிகை, இலக்கியம், கல்வி ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக பத்ம விபூசண் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day