ரூ. 4,400 கோடி நில மோசடி வழக்கில் சந்திரபாபு நாயுடு பிரதான குற்றவாளி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அமராவதி நில மோசடி வழக்கில் சந்திரபாபு நாயுடு பிரதான குற்றவாளி என ஆந்திர குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது, அமராவதி பகுதியில் உள்ள ஆயிரத்து 100 ஏக்கர் நிலங்களை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களிடம் இருந்து மோசடியான விலைக்கு வாங்கியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. சொற்ப தொகையை மட்டும் கொடுத்து சுமார் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கிய வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் நாராயணா, சுதிர்பாபு மற்றும் கே.பி.வி. அஞ்சனா குமாரி உள்ளிட்டோர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தான் பிரதான குற்றவாளி என ஆந்திர குற்றவியல் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

Night
Day