இந்தியா
சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் - எம்.பி சு.வெங்கடேசன்...
பொங்கல் பண்டிகை அன்று நடைபெற உள்ள சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை ஒத்திவைக்க வே?...
ஆயிரத்து 800 கோடி ரூபாய் அபராதம் விதித்து காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2018-2019 நிதியாண்டில் வருமான வரிக்கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு 210 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி கடந்த 2017 -18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக்கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும் இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பாஜக தற்போது வரி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுகிறது என்றும் பொருளாதார ரீதியில் காங்கிரஸ் கட்சியை முடக்கி மக்களவை தேர்தலில் வெற்றிபெறுவதே பாஜகவின் நோக்கம் என குற்றம்சாட்டியுள்ளார்.
பொங்கல் பண்டிகை அன்று நடைபெற உள்ள சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை ஒத்திவைக்க வே?...
கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்?...