ரூ.2,000 டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக வணிகர்கள் செலுத்தும் 2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Payment aggregators என்று அழைக்கப்படும் ஏர்டெல் பே, அமேசான் பே, சிசி அவின்யூ, பில்டெஸ்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆன்லைன் கட்டணங்களை ஏற்றுக் கொள்ளும் வணிகத்தை செய்கின்றன. இந்நிலையில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் 2 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 9ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

Night
Day