ரூ.2.01 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு : ஜி.எஸ்.டி நுண்ணறிவு இயக்குநரகம் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த நிதியாண்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக ஜி.எஸ்.டி வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2023 - 2024 ஆம் நிதியாண்டில் 20 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாயாக கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 11.6 சதவீதம் அதிகமாக உள்ள நிலையில், கடந்த நிதியாண்டு வருமானத்திலிருந்து 10 சதவீதம் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 83 ஆயிரத்து 588 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்திருப்பதாக ஜி.எஸ்.டி நுண்ணறிவு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.

Night
Day