ரூ.50 ஆயிரம் கோடியில் 8 அதிவேக சாலை வழித்தடம் அமைக்கும் திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 அதிவேக சாலை வழித்தடங்கள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார் 936 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த அதிவேக சாலை அமையவுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் முதலீடு உட்பட மொத்த மூலதன முதலீடு கடந்த ஆண்டுகளை விட 6 மடங்கு அதிகரித்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். 

Night
Day