ரெப்கோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - சக்திகாந்த தாஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்தவகையில், ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். அதில், ரெப்போ விகிதம் 6 புள்ளி 5 சதவீதமாகவே தொடரும் என தெரிவித்தார். இதன் மூலம், 2023 பிப்ரவரி முதல் தொடர்ந்து 10வது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day