ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி, ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படும் நிலையில், இவை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 6 புள்ளி 5 சதவீதமாகவே நீடித்து வருகிறது. தற்போது 11வது முறையாகவும் இதே வட்டி விகிதம் நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். இதனால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.

Night
Day