இந்தியா
பஹல்காம் தாக்குதல் - நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுக ! - பிரதமருக்கு ராகுல் கடிதம்...
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற இர?...
பாதுகாப்பு துறை அமைச்சரும், லக்னோ மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான ராஜ்நாத் சிங் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான 5வது கட்ட தேர்தல் வரும் மே 20ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், லக்னோ மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அப்போது, அவருடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதற்கு, முன்னதாக லக்னோ அனுமன் சேது கோயிலில் ராஜ்நாத் சிங் வழிபாடு மேற்கொண்டார்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற இர?...
நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் முதுமலை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் ...