லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும், அதானி குழும தலைவருமான கவுதம் அதானி, சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு, 250 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உலகின் 22வது பணக்காரராகவும், இந்தியாவின் இரண்டாவது பணக்காரராகவும் உள்ள கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கவுதம் அதானி அவருடைய உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோர், அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் அளிக்கும் சோலார் எனர்ஜி சப்ளை ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல்  லஞ்சம் கொடுத்திருப்பதாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் அதிகாரியான வினீத் ஜெயின் உள்ளிட்டோர், அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன் மற்றும் கடன் பத்திரங்களை பெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

சோலார் எனர்ஜி சப்ளை ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதை தெரிவிக்காமல் மறைத்ததன் மூலம் இத்திட்டத்தில் பல மில்லியன் டாலர்கள் முதலீடு செய்த முதலீட்டாளர்களை ஏமாற்றி இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷன் அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றுதல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தல் குற்றச்சாட்டை அதானி மீது வைத்துள்ளது. அசூர் பவர் குளோபல் நிறுவனத்தில் முன்னாள் அதிகாரிகளான ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால் மற்றும் கனடாவை சேர்ந்த முதலீட்டு நிறுவனத்தின் சிரில் கபாடினெஸ், சவுரப் அகர்வால், தீபக் மல்கோத்ரா ஆகியோர் மீதும் புருக்ளினில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே அதானி குழும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதானி மீது அமெரிக்காவில் மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day