லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படும் எம்.பி, எம்.எல்.ஏக்களை பாதுகாக்க முடியாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கோ அல்லது வாக்களிக்கவோ லஞ்சம் வாங்கிய எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு வழக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மற்றும் அவரது கட்சியின் நான்கு எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஷிபு சோரன் மற்றும் நான்கு எம்.பி.க்கள் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட அமர்வு விலக்கு அளித்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்தது. அதில் 1998ம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு செல்லாது எனவும், லஞ்சம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்குள் பேசவோ, வாக்களிக்கும் செயல்களில் ஈடுபடும் எம்பி மற்றும் எம்எல்ஏக்களை வழக்கிலிருந்து பாதுகாக்க முடியாது எனவும் தீர்ப்பு வழங்கியது.

Night
Day