லாரி மெக்கானிக் ஷெட்டில் பயங்கர தீவிபத்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பகதூரபூரில் உள்ள லாரி மெக்கானிக் ஷெட்டில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி முழுவதும் எரிந்து சேதமானது. 

குடியிருப்பு மிகுந்த பகுதியில் இருந்த இந்த மெக்கானிக் ஷெட்டில் நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர்பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பல லட்சரூபாய் மதிப்பிலான லாரி உள்ளிட்ட முக்கிய பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Night
Day