லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு முன்னணி தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த நிலையில் இன்று லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி விலகியுள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளதாகவும், ராஜினாமா அறிவிப்பை ட்விட்டரிலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து லக்னோவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

Night
Day