வகுப்பறைச் சுவரில் கல்லூரி முதல்வர் மாட்டு சாணம் பூசும் வீடியோ வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி பல்கலைக்கழகத்தின் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர், வகுப்பறைச் சுவர்களில் மாட்டு சாணத்தை பூசும் வீடியோ வெளியாகி, இணையத்தில் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள கல்லூரி முதல்வர் பிரத்யூஷ் வத்சலா, இந்திய பாரம்பரியத்தின்படி, சுவர்களில் மாட்டு சாணத்தைப் பூசி, வெப்பத்தை தணிப்பது குறித்து கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆய்வின் ஒரு பகுதிதான் இது எனக் கூறியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நெட்டிசன்கள்,  கல்லூரியின் சுவர்களை மாட்டு சாணத்தால் வெள்ளையடிக்கும் பணி தொடங்கி விட்ட நிலையில், இனி கல்லூரிகளில் மாட்டு சிறுநீர் குடிப்பது கட்டாயமாக்கப்பட்டால், நாடு ஒரு விஸ்வ குருவாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது எனச் சாடியுள்ளனர்.

Night
Day