எழுத்தின் அளவு: அ+ அ- அ
வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை அலுவல் ஒத்திவைக்கப்பட்டது.
வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன் கூடி எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் வக்பு சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். சபை இன்று கூடியதும், தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் 9 பேர் சபை அலுவலை ஒத்தி வைத்து விட்டு வக்பு வாரிய சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இவர்களுடன் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களும் ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகரிடம் அளித்தனர். எதிர்க்கட்சியினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டதால் சட்டப்பேரவை அலுவல் பாதிக்கப்பட்டது. இதனை சபாநாயகர் ஏற்காததால் எதிர்க்கட்சியினர் காகிதங்களை கிழித்து சட்டப்பேரவை மையப்பகுதியில் வீசினர். இதனால் சட்டப்பேரவை அலுவல்களை 15 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.