வக்ஃப் மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பல ஆண்டுகளாக வக்ஃப் அமைப்பு வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு ஒத்துப் போகாமல் இருந்தாக கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது சமூக, பொருளாதார, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாகும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, நீண்ட காலமாக விளிம்பு நிலையில் இருந்து வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு உதவும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற மற்றும் கமிட்டி விவாதங்களில் பங்கேற்ற மற்றும் இந்த மசோதாவுக்கு வலுசேர்க்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

Night
Day